விஜய் ரொம்ப போரிங்..அதை மாத்திக்கணும்!! நடிகை திரிஷா சொன்ன ரகசியம்..
திரிஷா
தென்னிந்திய சினிமாவில் டாப் இடத்தில் இருந்து வரும் நடிகை திரிஷா, அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் லீட் ரோலில் நடித்து வருகிறார் திரிஷா.
அவர் நடிப்பில் அஜித்தின் விடாமுயற்சி வரும் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், திரிஷா நடிகர் விஜய் குறித்து பேசிய பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
விஜய் ரொம்ப போரிங்
அதில், என்னை படப்பிடிப்பில் டீஸ் செய்வது சிம்புதான், ஆனால் விஜய், ரொம்ப போரிங், ரொம்ப அமைதியாக இருப்பார். ஒரு பெரிய சுவரை பார்த்து சும்மாவே உட்கார்ந்திருப்பார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் சைலெண்ட்டாகத்தான் இருப்பார். அதற்கு விஜய், வேலைங்க, அதைபத்தி யோசிப்பேன் என்று இருக்கிறார்.
அதெல்லாம் இல்லை, சில சமயம் கண்ணை மூடிக்கிட்டு இருப்பார் என்று திரிஷா கூறியிருக்கிறார். நான் உங்களுக்கு போரிங்-ஆ என்று விஜய் திரிஷாவை பார்த்து கேட்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து, விஜய் தன் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் திரிஷா கூறியிருக்கிறார். அதற்கு நான் அப்படியெல்லாம் கிடையாது என்று பதிலளித்திருக்கிறார் நடிகர் விஜய்.