8 மனைவி..20 பசங்க..100 பேருக்கு சமையல்!! எல்லாத்தையும் சமாளிச்சாரு தாத்தா!! MR ராதா பேரன் ஓபன்..

M R Radha Gossip Today Tamil Actors
By Edward Jan 17, 2026 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் மூத்த கலைஞரும் புரட்சியாளருமான மறைந்த நடிகர் எம் ஆர் ராதா பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை அவரது பேரனும் நடிகருமான வாசு விக்ரம் என்கிற பார்த்திபன் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

MR ராதா பேரன்

எம் ஆர் ராதா பற்றி பலர் வைக்கும் குற்றச்சாட்டு அவர் பல பெண்களை திருமணம் செய்து கொண்டதுதான். அவரது பேரன் நடிகர் வாசு விக்ரம் கூறுகையில், என் தாத்தா 8 பொண்டாட்டி கட்டினார். இப்போது எல்லாம் 2 பொண்டாட்டி கட்டினாலெ பலரும் திட்டுகிறார்கள். ஆனால் அவர் 8 பேரை திருமணம் செய்து 8 பேரையும் ஒரேவீட்டில் வைத்து பார்த்துக்கொண்டார்.

8 மனைவி..20 பசங்க..100 பேருக்கு சமையல்!! எல்லாத்தையும் சமாளிச்சாரு தாத்தா!! MR ராதா பேரன் ஓபன்.. | Mrradha Vasu Vikram Open Up About Family

தினமும் 100 பேருக்கு வீட்டில் சாப்பாடு சமைப்பார்கள். 6 கார் மற்றும் இரண்டு வேன் வைத்திருந்தார். தாத்தா எம் ஆர் ராதா, தன் சொத்தை அனைவருக்கும் சரி சமமாக பிரித்துக் கொடுத்தார். திருச்சியில் 43 வீட்டுகளை எங்களுக்கு ஒரே இடத்தில் கட்டினார்.

ஆனால் அவற்றை எங்களால் பராமரிக்க முடியாததால் நாங்கள் அவற்ரை விற்றுவிட்டோம். சித்தப்பா ராதா ரவி இருக்கும் தேனாம்பேட்டை வீடுதான் எங்களுக்கு ஹெட் ஹோட்டர்ஸ். நாங்கள் அனைவரும் அங்குதான் இருப்போம்.

8 மனைவி..20 பசங்க..100 பேருக்கு சமையல்!! எல்லாத்தையும் சமாளிச்சாரு தாத்தா!! MR ராதா பேரன் ஓபன்.. | Mrradha Vasu Vikram Open Up About Family

என் தாத்தா இறந்த அடுத்த 5 ஆண்டுகளில் என் தகப்பனாரும் மறைந்துவிட்டார். நான் சினிமாவுக்கு வரும்வரை எனக்கு என் தாத்தா குறித்து பெரிதாக எதுவும் தெரியாது. அதன்பிந்தான் நான் தெரிந்துகொண்டேன் என்று வாசு விக்ரம் தெரிவித்துள்ளார்.