6 வயது குறைந்த 100 கோடி வசூல் நடிகருடன் ரொமான்ஸ்!! வாய்ப்பிற்காக நடிகை திரிஷா போட்ட பிளான்
Trisha
Tovino Thomas
Tamil Actress
By Edward
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, விஜய்யின் லியோ படத்தில் நடித்து வருகிறார். ரீஎண்ட்ரி கொடுத்ததும் முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது மலையாள சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார் திரிஷா. மலையாள நடிகர் டொவினோஒ தாமஸ் நடிப்பில் பரான்சிக் என்ற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி வசூல் ஈட்டியது.
அப்படத்தினை தொடர்ந்து ரொவினோ தாமஸ், ஐடென்டிடி என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்து வந்தது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகை திரிஷா தான் டொவினோ தாமஸ்-க்கு ஜோடியாகப்போகிறார் என்று கூறப்படுகிறது. திரிஷாவை விட கிட்டத்தட்ட 6 வயது குறைவானவர் நடிகருடன் ஜோடி போடவுள்ளது, அனைவரின் எதிர்ப்பை அதிகரித்துள்ளது.
