டேய் சோளமுத்தா கேக்குதா! அண்ணாத்தயை வைத்து பழிதீர்த்த சன் டிவி.. என்ன தெரியுமா?
தொலைக்காட்சி சேனல்கள் மற்ற சேனல்களை விட டி ஆர் பி முதல் இடத்தினை பிடிக்க கடும் போட்டிகளை மேற்கொண்டு பல நிகச்சிகள் மற்றும் சீரியல்களை ஒளிப்பரப்பு செய்து வருகிறது.
அந்தவரிசையில் தமிழ் தொலைக்காட்சியின் முன்னணி டிவியான விஜய் டிவி மற்றும் சன் டிவிகளுக்கு இடையே கடும்போட்டிகள் நிலவி வந்தன. இந்நிலையில் சன் டிவி கடந்த ஒரு வாரத்தில் கொடுத்த வெற்றியால் இந்தியாவிலேயே முதல் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே ஒருமுறை முதல் இடத்தினை பிடித்து வந்த சன் டிவி தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் டிவியையும் மற்ற தொலைக்காட்சியையும் தூக்கி கீழே போட்டுள்ளது.
அதிலும் முதல் இடத்தினை பிடித்தே வரும் ஸ்டார் ஸ்போர்ஸ் சேனலையையே 400 புள்ளிகள் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் அண்ணாத்த படத்த வெச்சுட்டே இத பண்ணிட்டல என்று கூறி வருகிறார்கள்.
