மேக்கப் ரூமில் படப்பிடிப்பில் அனுபவித்த சித்ரவதை... சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட சோகம்

Tamil Cinema Tamil TV Serials
By Yathrika Apr 29, 2024 10:30 AM GMT
Report

கிருஷ்ண முகர்ஜி

ஹிந்தி தொலைக்காட்சியில் சீரியல்கள் நடித்து பிரபலமானவர் கிருஷ்ண முகர்ஜி.

கடந்த 10 வருடங்களாக தொலைக்காட்சி துறையில் இருக்கும் இவர் நாகினி 3 உள்பட பல தொடர்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் தனது சமூக வலைதளத்தில், நான் அனுபவித்த மோசமான விஷயங்களை இத்தனை நாட்கள் எனக்கு சொல்ல தைரியம் வரவில்லை.

தங்கல் டிவியில் எனது கடைசி நிகழ்ச்சியான சுப் ஷகுன் நிகழ்ச்சியை நான் செய்யத் தொடங்கியது போது மனச்சோர்வு எனக்கு தொடங்கியது.

மேக்கப் ரூமில் படப்பிடிப்பில் அனுபவித்த சித்ரவதை... சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட சோகம் | Tv Actress Faced Torture In Makeup Room

தயாரிப்பு நிறுவனமும், தயாரிப்பாளர் குந்தன் சிங்கும் என்னைப் பலமுறை துன்புறுத்தியுள்ளனர். ஆடைகளை மாற்றும் போது அவர்கள் ஒருமுறை என்னை என் மேக்கப் அறையில் அடைத்து வைத்தனர்.

5 மாதங்களாக இன்றுவரை எனது சம்பளத்தை தரவில்லை, நான் முழுவதும் பாதுகாப்பற்று உடைந்து பயந்துவிட்டேன் என சோகமான விஷயத்தை கூறியுள்ளார்.