தெருவுக்கு வந்து சமோசா விற்கும் நிலை? செய்தி வாசிப்பாளருக்கு ஏற்பட்ட பரிதாபம்

Afghanistan Taliban War Afghanistan
By Edward Jun 18, 2022 05:10 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தாலிபான் அமைப்பின் ஆட்சியால் அந்நாட்டில் கடும் பொருளாதாரா நெருக்கடியால் மக்கள் கொரோனா தாக்கம் காரணமாக வேலைவாய்ப்பின்றி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தாலிபான் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் இருந்த சுமார் 230 ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் வேலைவாய்ப்பில்லாமல் போனார்கள்.

இதனிடையே பிரபல பத்திரிக்கையாளரும் செய்தியாளருமான மூசா முகமதி என்பவர் ரோட்டில் சமோசா விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பல்வேறு ஊடகங்களுக்கு பணியாற்றி செய்திவாசிப்பாளர், நெறியாளர், நிரூபர் என பன்முகத்திறமை கொண்டவர் இப்படி சமோசா விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று கபீர் என்பவர் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.