25 வயது இளம் சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்! சின்னத்திரை ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
சினிமா மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பலரது மரணம் தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. சமீபத்தில் சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முகப்ரியாவின் கணவர் இளம் வயதில் மாரடைப்பால் இறந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அவர்களுக்கு திருமணம் ஆகி ஒரே வருடம் தான் ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது 25 வயது சின்னத்திரை நடிகர் மாரடைப்பால் இறந்த செய்தி ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
பவன்
ஹிந்தி மற்றும் தமிழ் சின்னத்திரையில் நடித்து வந்த பவன் என்பவர் நேற்று திடீர் மாரடைப்பால் இறந்திருக்கிறார். அவருக்கு வயது வெறும் 25 தான்.
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த அவர் நடிப்பு கெரியருக்காக மும்பையில் தங்கி இருந்திருக்கிறார்.
இறந்த பவனின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட இருக்கிறது.