குடிப்பழக்கம் இல்லாமல் விஜய்யால் எங்கயும் போக முடியாது!! நடிகை ரஞ்சனா நாச்சியார்...
நடிகர் விஜய்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவருக்கு ஏதாவது ஒரு இடத்தில் இருந்து பிரச்சனைகள் வந்துக் கொண்டே இருக்கிறது. கரூர் நெரிசல் விவகாரம், ஜனநாயகன் ரிலீஸ் விவகாரம், சங்கீதா விவாகரத்து விவகாரம், திரிஷா திருமண நிகழ்ச்சி விவகாரம் வரை தற்போது வரை சிக்கல்களை சந்தித்து வருகிறார் விஜய்.

இதற்கிடையில், தன் கணவர் விஜய், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் எவ்வளவோ கண்டித்தும் தனியாக நடிகையுடன் வெளியில் செல்வது புகைப்படம் போடுவதுமாக இருந்து வருகிறார் என்றும் புகாரளித்து விவாகரத்து மனுதாக்கல் செய்தார் சங்கீதா. இவ்வழக்கு இன்னும் விசாரணைக்கு வராத நிலையில், அது தேர்தல் நேரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
ரஞ்சனா நாச்சியார்
இந்நிலையில் தவெக கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி, விஜய் மீது குற்றச்சாட்டை வைத்த நடிகை ரஞ்சனா நாச்சியார் விஜய் குறித்து பேட்டியொன்றில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஜய் விவாகரத்து, திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சியை கண்டு, ரசிகர்களுக்கு அவர் முன்னுதாரமாக இருக்கிறார் என்ற விமர்சனத்தை வைத்து தவெக கட்சியில் இருந்து விலகினார் ரஞ்சனா. அதன்பின் திமுக கட்சியில் இணைந்த ரஞ்சனா, பேட்டியில் விஜய் குறித்து கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார்.
ரஞ்சனா நாச்சியார் பேசுகையில், மக்கள் சந்திப்பு நடக்கும்போது மது அருந்திவிட்டு தான் மேடைக்கு செல்வார் விஜய். அவர் மக்களிடம் போதை ஒழிப்பு பற்றி பேசுவது போலித்தனமானது. குடிப்பழக்கம் இல்லாமல் விஜய்யால் விமானத்தில் பயணம் செய்யமுடியாது. இதனால் தான் கட்சியில் இருந்து விலகினேன் என்று ரஞ்சனா நாச்சியார் பேசியிருக்கிறார்.