மத்தவங்க உழைப்பில் கல்லாக்கட்டிய ரெட் ஜெயண்ட்... சொந்த படத்தால் சூனியம் வைத்துக்கொண்ட உதைய்ணா..

Udhayanidhi Stalin Love Today Kalaga Thalaivan
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என்ற பொறுப்பை தாண்டி தற்போது விநியோகஸ்தராக கொடிக்கட்டி பறந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

மாமன்னன் படத்திற்கு பிறகு சினிமாவைவிட்டு விலகிவிடுவேன் என்று கூறியிருந்த உதயநிதி தற்போது கமல் ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவும் இருக்கிறார். சமீபத்தில் பல படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு உதயநிதி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தினை பெற்று வருகிறார்.

கலகத்தலைவன் படத்தின் பிரமோஷனில் பல படங்கள் தோல்வி அடைந்ததையும் சில நடிகர்களின் படத்தை கலாய்த்து பேசியும் வந்தார். அப்படி வசூல் ரீதியாகவும் கதை ரீதியாகவும் மற்றப்படங்களை கலாய்த்து வந்த கலகத்தலைவன் படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக பெரிய அடியை சந்தித்துள்ளது.

உதயநிதி வெளியிட்ட லவ் டுடே படம் 65 கோடிக்கும் மேல் வசூலித்து தற்போது தெலுங்கு மொழியிலும் வெளியாகவுள்ளது. ஆனால் கலகத்தலைவன் இதுவரையில் 1.11 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறதாம்.

சொந்த செலவுக்கே இப்படி ஆகிவிட்டதே என்று உதயநிதி சற்று வருத்தத்திலும் இருக்கிறாராம்.