ஆணவத்தில் உதவி இயக்குனர்களை அடிக்கும் மாரி செல்வராஜ்!! உண்மையை உடைத்த உதயநிதி ஸ்டாலின்..

Udhayanidhi Stalin Vadivelu Mari Selvaraj Maamannan
By Edward Jun 22, 2023 09:32 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பல நடிப்பில் மாமன்னன் படத்தினை இயக்கியுள்ளார்.

வரும் 29 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாகவுள்ள நிலையில், மாரி செல்வராஜ் இசைவெளியீட்டு விழாவில் மாமன்னன் உருவாக தேவர்மகன் போட்ட விதை தான் என்று கூறியிருந்தார். அப்படி அவர் பேசியது சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் பிரமோஷனுக்காக உதயநிதி ஸ்டாலின் பேட்டி கொடுத்து வருகிறார். சமீபத்தில் வடிவேலுவுடன் இணைந்து பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது, ஷூட்டிங்கில் மாரி செல்வராஜ் தான் அதிகமாக கோபப்படுவார் என்றும் உதவி இயக்குனர்களை அடிப்பார் என்றும் கண்ணாபின்னானு கத்துவாரு, போர்களமாதிரி இருக்கும் என்றும் கூறியுள்ளார் உதயநிதி. இதற்கு நெட்டிசன்கள் பலர் இரண்டு படத்தை எடுத்துவிட்டு ஆணவத்தில் ஆடுகிறார் என்று விமர்சித்து வருகிறார்கள்.

ஏற்கனவே பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கலைஞர்களை அடுத்த விவகாரம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில் இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.