ஒரு படம் கூட எடுக்கல அதுக்குள்ள இப்படியா! மனைவியை கலாய்த்து தள்ளிய உதயநிதி

Udhayanidhi Stalin Kiruthiga Udhayanidhi
By Edward Jul 31, 2022 07:15 AM GMT
Report

நடிகரும் திமுக கட்சியின் எம் எல் ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தினை நடத்தி வருகிறார். பல படங்களை வாங்கி விநியோகம் செய்து வரும் உதயநிதி தன் மனைவி இயக்கிய பேப்பர் பட்டாசு படத்தின் பிரமோஷனுகாக கிருத்திகாவுடன் சேர்ந்து பேட்டியளித்துள்ளார்.

தங்களுடைய காதல் முதம் படம் வரை பல விசயங்களை கலாய்த்தபடியும் உதயநிதி அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தவகையில் திருமண வாழ்க்கை 20 ஆண்டுகளாகிவிட்டது. காதலோடு சேர்ந்து 27 ஆண்டுகள் எங்கள் உறவு இருந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் முதலில் உதயநிதி காதல் பிரமோஷ் செய்யும் போது கிருத்திகா வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்துள்ளார். அரசியல் குடும்பம் என்பதால் செட்டாகாது என்று கூறியிருக்கிறார். அதன்பின் படத்தினை இயக்க முடிவெடுக்கும் போது கிருத்திகா மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது.

அதனால் ஒரு இயக்குனரிடம் சென்று அசிஸ்டண்ட்டாக பணியாற்று என்று அனுப்பி வைத்தேன். பின் என்னிடம் வந்த கிருத்திகா எனக்கு தெரிஞ்சது கூட அந்த இயக்குனருக்கு தெரியல என்று சொன்னாங்க.

ஒரு படம் கூட எடுக்கல அதுக்குள்ள இப்படியா என்று கூறி கிண்டல் செய்துள்ளார் உதயநிதி. பின் என் நண்பன் சசியை வைத்து கிருத்திகா இயக்கத்தில் வணக்கம் சென்னை உருவானது. அந்த இயக்குனர் மிஸ்கின் தான் என்று பலர் கூறி வருகிறார்கள்.