Ex-Change-ஆன சோபா..புஷ்பா பட பாணியில் இந்த ஆட்சி!! முதலமைச்சரை விளாசிய உதயநிதி...
144 பேர் ஆதரவு
தமிழக முதலமைச்சர் விஜய், மே 13 ஆம் தேதி தன்னுடைய கட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்த நிலையில், சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. 144 பேர் ஆதரவு அளித்த நிலையில், முதலமைச்சராக விஜய் தொடர்வதாக சபாநாயகர் அறிவித்திருக்கிறார்.

திமுக உள்ளிட்ட 60 பேர் வெளிநடப்பு செய்த நிலையில், வெளிநடப்பு செய்வதற்கு முன் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்த விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
உதயநிதி
தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை என்றாலும் திமுகவின் கூட்டணியில் இருந்த விசிக, இரண்டு கம்யூனிஸ்ட்கள், இந்தியன் யூனியன் முஸ்லீக் கட்சி உள்ளிட்டோரின் ஆதரவில் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.

அப்படி ஆதரவு தெரிவித்த, சிவி சண்முகம் அவரது வீட்டிற்கு புதிய சோபா சென்றது, அதன்பின் முதலமைச்சரும் சென்றார். இதை பார்த்த மக்கள் இதை Change என்று நினைக்கவில்லை, எக்ஸ்-சேன்ஜ் மாடல் ஆடியாக இருக்கிறதே என்ற சந்தேகம் வருகிறது.
இந்த ஆட்சி புஷ்பா பட பாணியில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.