அரசியலுக்கு வந்தா பொய்லாம் சொல்லனும்! சிவகார்த்திகேயன் டான் -ஆல் உதயநிதி தாக்கப்பட்டாரா? வைரலாகும் வீடியோ
நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கிய டான் படத்தில் நடித்திருந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் தியேட்டரில் வரும் மே 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் போஸ்டர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
கல்லூரி சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கபட்ட இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விழாவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் டிரைலர் ஒளிப்பரப்பாகியது.
, அப்போது ஒரு காட்சியில், சிவகார்த்திகேயன் பேசாம அரசியல் போய்டுவோமா என்று கேட்க, பொய் நிறைய சொல்லனும்னு விஜய் கூறியுள்ளார். அப்போ வேணாம் அப்போ வேணாம் என்று சிவா கூறுவார்.
இதை கண்ட உதயநிதியும் சிவகார்த்திகேயனும் தங்களுக்குள்ளே சிரித்தபடி பேசிக்கொண்டனர். இதை வைத்து பலர் உதயநிதியை தாக்கினார் டான் சிவகார்த்திகேயன் என்று வீடியோவோடு கலாய்த்தபடி வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CdPgdegF5Tl/