சினிமாவில் இருந்து விலகிய உதயநிதி ஸ்டாலின்!! 25 லட்சம் கேட்ட தயாரிப்பாளர்..
உதயநிதி ஸ்டாலின்
மாமன்னன் படத்தோடு சினிமாவில் இருந்து விலகி தற்போது தமிழ் நாட்டின் துணை முதலமைச்சராக பதிவியேற்றி பணியாற்றி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். OST என்ற நிறுவனம் தயாரிப்பில், 2018ல் அவர் நடிப்பதாக இருந்த ஏஞ்சல் படம் ஷூட்டிங்கோடு அப்படியே நிறுத்தப்பட்டது.
80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் மீதம் 20 சதவீதம் மட்டும் இருப்பதாகவும் கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி மீது வழக்கு தொடர்ந்தார். இப்படத்திற்கு 13 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாகவும் மீதம் 8 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டால் படத்தை முடித்துவிடலாம் அல்லது இந்த படத்திற்கு நஷ்ட ஈடாக 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டியும் தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
மேல்முறையீட்டின் வழக்கு
உதயநீதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 7 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு இப்போது வழக்கு தொடர்வது நியாயமற்றது என்று கூறியிருக்கிறார்.
இதனையடுத்து படத்தை முடித்துக்கொடுக்காததால் தயாரிப்பாளர் தரப்பிற்கு எந்தவொரு இழப்பும் இல்லை என்றும் இது காலதாமதமான மனுதாக்கல் என்று கூறி நீதிபதி வழக்கை நிராகரித்துவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர் ராமசரவணன் மேல்முறையீடு செய்ய தாக்கல் செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டின் வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் பிப்ரவரி 17 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 18 ஆம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.