அஜித்தை வைத்து விஜய்க்கு ஆப்பு வைத்த உதயநிதி ஸ்டாலின்.. எல்லாத்துக்கும் குருவி தான் காரணமா
வாரிசு - துணிவு
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். அதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

ஆப்பு வைத்த உதயநிதி
ஆனால், இரு படங்களில் ஒரே தேதியில் வெளியாகிறதா? இல்லை ஓரிரு தேதிகள் தள்ளி வெளியாகிறதா என்று இதுவரை தெரியவில்லை. துணிவு படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில், விஜய்யின் வாரிசு எந்த தேதியில் வெளியாகிறதோ அதே தேதியில் தான் துணிவு வெளியாகும் என்று முடிவெடுத்துவிட்டாராம் உதயநிதி.

இதில் எந்த வித மாற்றமும் இல்லையாம். ரெட் ஜெயிண்ட் தயாரிப்பில் விஜய் நடித்து வெளிவந்த குருவி திரைப்படம் படுதோல்வியடைந்தது. இதனால் தான் இப்போ உதயநிதி விஜய்க்கு இப்படியொரு ஆப்பு வைக்கிறாரோ என்றும் பலரும் கேட்டு வருகிறார்கள்..