கிளாமராக உடை அணிந்த நயன்தாரா.... வெளியிலேயே மாற்ற சொன்ன இயக்குனர்
நயன்தாரா
சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நயன்தாரா ஆரம்பத்திலேயே டாப் இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்தார். அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்று கஜினி.
இதில் ஒரு சின்ன ரோலில் முருகதாஸ் இயக்கத்தில் நடித்தார். கஜினியை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்ட ஒரு பெண்ணாக நடித்திருப்பார். கிளைமேக்ஸில் வில்லனிடம் இவர் சிக்கிக்கொள்ள கஜினி காப்பாற்றுவார்.
அப்படி கஜினி படத்தில் நடிக்கும் போது ஒரு காட்சியில் மிகவும் கிளாமராக உடை அணிந்துள்ளார். அந்த காட்சியை பார்த்த முருகதாஸ் இப்படி நான் எடுக்க மாட்டேன், உடையை மாற்றுங்கள் என கூறியுள்ளார்.
ஆனால் நயன்தாரா மாற்று உடை இல்லை என்று கூற, உடனே உதவி இயக்குனர்கள் ரோட்டு கடையில் இருந்து ஒரு உடையை வாங்கி கொடுத்துள்ளனர்.. அந்த ஆடையை மாற்ற கேரவன் கூட இல்லாததால் காரின் பின்னால் சென்று உடையை மாற்றியுள்ளார் நயன்தாரா. ,