அந்த மாதிரியான கவர்ச்சி காட்சியில் நடித்து சினிமாவில் பிரபலமான வந்த தேவயானி!.. இப்படியும் நடந்துச்சா?
90 களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் நடிகை தேவயானி. இவர் 1995 -ம் ஆண்டு வெளியான தொட்டா சிணுங்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த காதல் கோட்டை படத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் தேவயானி குறித்து பல சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் தேவயானி சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சிவசக்தி என்கிற படத்தில் இடம் பெற்றுள்ள கவர்ச்சி பாடலுக்கு நடனமாட வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம் என நினைத்த தேவயானி. இதற்கு ஓகே சொல்லிட்டாராம். இதையடுத்து தேவயானிக்கு பல கவர்ச்சி பாடல்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் இவர் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டு.ஹோம்லி கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார்.