15 வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போனவர்!! இன்று லேடி சூப்பர் ஸ்டாராக மின்னும் நடிகை.. யார் தெரியுமா?

Kangana Ranaut Tamil Actress Lok Sabha Election 2024
By Edward Jun 05, 2024 10:30 PM GMT
Report

சினிமாவில் நடித்து நல்ல ஒரு இடத்தினை பெற பெண்கள் பலர் வீட்டைவிட்டே ஓடி வந்துவிடுகிறார்கள். அந்தவகையில் சினிமா ஆசையில் நடிகை ஒருவர் ஊடைவிட்டே ஓடிவந்த கதையை இந்த பதிவில் பார்ப்போம். 15 வயதில் வீட்டைவிட்டு ஓடி வந்து தங்க இடமின்றி பிளாட்பாரத்தில் தூங்கி பல கஷ்டங்களை சந்தித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக பாலிவுட் சினிமாவையே கலக்கி வருபவர் தான் நடிகை கங்கனா ரனாவத்.

15 வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போனவர்!! இன்று லேடி சூப்பர் ஸ்டாராக மின்னும் நடிகை.. யார் தெரியுமா? | Unknown Facts About Kangana Ranaut

இமாச்சலப்பிரதேசத்தில் பாம்பியா என்ற ஊரில் ராஜ்புட் குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக இருந்த நடிகை கங்கனா ரனாவத், நடிப்பின் மீது ஆசையில் இருந்துள்ளார். பின் அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க 15 வயதில் மும்பைக்கு ஓடி வந்துள்ளார் கங்கனா ரனாவத். பிளாட் பாரத்தில் மும்பையில் இடம் கிடைக்காமல் அங்கே தூங்கி எழுந்துள்ளார்.

பின் 19 வயதில் நடிக்க சான்ஸ் கிடைத்து அனுராக் பாசு இயக்கத்தில் கேங்கஸ்டர் படத்தில் நடிகையாக அறிமுகமாகினார். அப்படி ஆரம்பித்து பாலிவுட்டில் திருப்புமுனையாக அவருக்கு அமைந்த படம் தான் பேஷன்.

திரிஷாவுடன் லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்து பிரபல நடிகர்.. அவரை பேட்டியில் சொல்லிட்டாரே!

திரிஷாவுடன் லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்து பிரபல நடிகர்.. அவரை பேட்டியில் சொல்லிட்டாரே!

துணை நடிகைக்காக தேசிய விருதினை பெற்ற கங்கனா சமீபத்தில் இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை என்ற பெயரையும் எட்டிப்பிடித்தார். பாலிவுட்டில் நெப்போடிஸ்ம் தலைத்துக்கியதை வெட்டவெளிச்சம் போட்டு காட்டினார் கங்கனா.

நடிகையாக ஜொலித்தது போதாது என்று மணிகர்னிகா என்ற படத்தை இயக்கி இயக்குனராக மாறினார். தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தன் சொந்த ஊரான மந்தி தொகுதியில் பாஜக சார்பில் போட்டிட்டு வெற்றியையும் பெற்றார் கஞ்கனா ரனாவத்.