அஜித்தை அவமானப்படுத்திய பிரபல இயக்குனர், இனி அவர் படமே வேண்டாம் என முடிவு
அஜித்
அஜித் இன்று தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். இல்லை இல்லை.. அவரை இனி தல என்று சொல்லக்கூடாது, ஏகே என்று தான் அழைக்க வேண்டும் என்று அவரே கூறிவிட்டாரே.
சரி இது ஒரு புறம் இருக்கட்டும், ஒரு தயாரிப்பாளர் ஒருவர் அஜித் நடிக்க வந்த போது அவருக்கு நடந்த அவமானம் குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.
இனி அவர் படமே வேண்டாம்
இந்த பேட்டியில் அந்த தயாரிப்பாளர், அஜித் அமரவாதி முடித்த கையோடு ஒரு பிரபல இயக்குனரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்தார்.
அங்கு நானும் இருந்தேன், அப்போது பார்ட்டி ஒரு ரூமில் நடக்க அஜித் கையில் ஒரு பூங்கொத்துடன் வாழ்த்து சொல்ல காத்திருந்தார்.
அந்த இயக்குனர் அஜித்தை கடைசி வரை வந்து வாங்க என்று கூட சொல்லாமல், பார்க்கவே தவிர்த்தார்.
அஜித் பொறுமை இழந்து ஒரு கட்டத்தில், உதவியாளரிடம் அவருக்கு வாழ்த்து சொல்லிருங்க, என்று பூங்கொத்தை கொடுத்ததோ, எனக்கு என்று ஒரு நாள் வரும் என்று கூறி கடந்தார்.
அதன் பிறகு அஜித் உச்சம் தொட்ட பிறகு அந்த இயக்குனர் எவ்வளவு முயற்சி செய்தும் அஜித் அவர் படத்தில் நடிப்பதை தவிர்த்தார் என கூறியுள்ளார்.