42 வயதாகியும் திருமணமாகவில்லை! சீரியலே கதியென கிடக்கும் நடிகை ஸ்ருதி ராஜ்..

Serials Shruthi Raj
By Edward Apr 27, 2022 11:10 AM GMT
Report

சினிமாவில் நடித்த நட்சத்திரங்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை சீரியலுக்கு தாவி விடுகிறார்கள். அப்படி அக்ரஜன் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகி நடிகர் விஜய்யின் மாண்புமிகு மாணவன் படத்தில் நடித்தவர் நடிகை ஸ்ருதி ராஜ்.

இப்படத்திர்கு பிறகு தமிழ், மலையாளம், கன்னடம் படத்தில் கதாநாயகியாகவும் க்ளாமர் காட்சிகளிலும் நடித்து பிரபலமானார். இதன்பின் 2008ல் இயக்கம் படத்திற்கு பிறகு வெள்ளித்திரைக்கு டாட்டா காண்பித்து சின்னத்திரையில் தென்றல் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அறிமுகமாகினார்.

தென்றல் சீரியலால் 6 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார் ஸ்ருதி. திருமதி செல்வம், ஆபிஸ், அபூர்வ ராகங்கள், அழகு, போன்ற சீரியல்கள் ஸ்ருதி கேரியரில் மிகமுக்கியமானதாக அமைந்தது.

தற்போது பிரபல தொலைக்காட்சியின் தாலாட்டு சீரியலில் நடித்து வருகிறார். தற்போது 42 வயதாகும் நடிகை ஸ்ருதி ராஜ் இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்தும் தன் அம்மாவுடன் நேரத்தினை செலவிட்டும் வருகிறார்.

போட்டோஷூட்டில் ஆர்வம் கொண்ட ஸ்ருதி ராஜ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.