நோரா ஃபதேஹி போல உடம்பு வேண்டும்!! மனைவியை டார்ச்சர் செய்த கணவர்..
பொதுவாக ஆண்களுக்கு பிடித்தமான நடிகைகள் இருப்பார்கள். அவர்களை போல் இருக்கும் பெண்ணிற்கும் அவர்கள் ஆசைபடுவார்கள். 90ஸ் கிட்ஸ்கள் பெரும்பாலும் ஸ்ரீதேவி, சிம்ரன், த்ரிஷா போன்றவர்களை போல் மனைவி அமைய வேண்டும் என்றும் தற்போது 2கே கிட்ஸ்கள் கிளாமர் நடிகைகளை போல் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
இப்படி இருக்கும் நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஷான்வி என்பவரை தன் கணவர் மீது மோசமான புகாரை அளித்துள்ளார்.
கணவர் ஷிவம் உஜ்வால்
கணவர் ஷிவம் உஜ்வால், ஒரு காமக்கொடூரன் என்றும் எப்போதும் மற்ற பெண்களை காம எண்ணத்தில் தான் அணுகுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதாவது, சமூக வலைத்தளங்களில் கிளாமராக புகைப்படங்களை பகிரும் நடிகைகள் முதல் இளம் பெண்கள் வரை பலரையும் அவர் பின் தொடர்வதாகவும், அதுமட்டுமில்லாமல் இணையத்தில் ஆபாச படங்களை பார்த்துவிட்டு, அதேபோல் தன்னையும் உடலுறவுக்கு ஒத்துழைப்பு தர சொல்லி சித்திரவதை செய்வதாகவும் கூறி புகாரளித்திருக்கிறார்.
மேலும் அந்த புகாரில் பெரும்பான்மையாக இயற்கைக்கு மாறான உடலுறவில் தன்னை ஈடுபடும்படி நிர்பந்திக்கிறார். தான் அழகாகவும், தனது உயரத்திற்கு ஏற்ற உடலமைப்புடன் இருந்தாலும், தன் கணவர் மற்றும் மாமியார், தினமும் தன்னை மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் 3 மணி நேரத்தில் கொஞ்சம் தவறினாலும் உணவு தராமல் சித்திரவதை செய்வதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
நோரா ஃபதேஹி போல உடம்பு வேண்டும்
மேலும், நடிகை நோரா ஃபதேஹி போல் என்னுடைய உடலமைப்பு மாற வேண்டும் என சித்திரவதை செய்கிறார்கள். தான் கர்ப்பமான பின் உணவில் கருச்சிதைவு மாத்திரைகள் கலந்து கொடுத்து என் உடலையும் நாசப்படுத்திவிட்டார்கள். உஜ்வால் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்ததை அடுத்து, கணவரால் தான் தாக்கப்பட்டேன் என்றும் புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார்.