சரவணன் அருளுக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஊர்வசி ராவ்டேலா வாங்கிய சம்பளம், இத்தனை கோடியா

Saravanan Arul The Legend
By Kathick Aug 01, 2022 03:58 AM GMT
Report

சரவணனன் அருள் நடிப்பில் கடந்த 29ஆம் தேதி வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் தி லெஜண்ட். இப்படத்தை ஜெடி - ஜெரி இருவரும் இணைந்து இயக்கியிருந்தார்கள்.

இப்படத்தில் சரவணனன் அருளுடன் இணைந்து கீத்திகா டிவாரி, ஊர்வசி ராவ்டேலா, விவேக், ரோபோ ஷங்கர், விஜயகுமார், பிரபு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில், இப்படத்தில் தி லெஜண்ட் சரவணன் அருளுடன் இணைந்து நடிக்க பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா ரூ. 20 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.