போதைக்கு அடிமையானதால் விவாகரத்து செய்த கணவர்! 43 வயதில் மறுமணம் செய்த நடிகை ஊர்வசி!

Urvashi Indian Actress
3 நாட்கள் முன்
Edward

Edward

80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் தற்போது வரை சினிமாவில் நிலைத்திருக்கும் நடிகைகளாக ஒருசிலர் இருக்கிறார்கள். அப்படி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் சிறந்த இடத்தினை பெற்று வருபவர் நடிகை ஊர்வசி.

2000 ஆம் ஆண்டு நடிகர் மனோஜ் என்பவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றார். ஊர்வசி ஆரம்பத்தில் இருந்தே மதுப்பழக்கம் கொண்டவர். திருமணத்திற்கு பிறகும் அது தொடர்ந்ததால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால் கணவர் மனோஜ்-க்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மகள் யாருடன் இருக்க வேண்டும் என்ற வாக்குவாதத்தில் நீதிபதியின், ஊர்வசி எப்போது போதையில் இருப்பதாக காரணத்தை கூறி மகளை மனோஜ் வளர்த்து வந்தார்.

இதன்பின் மனோஜ் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனிமையில் இருந்த ஊர்வசி 2013ல் 43 வயதில் சிவபிரசாத் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அடுத்த ஆண்டே ஒரு ஆண் குழந்தையையும் பெற்றார் ஊர்வசி.

இதன்பின் மகனை பிரியாமல் படப்பிடிப்புக்கு கூட கூட்டிக்கொண்டு செல்வாராம். இதன்பின் மதுபழக்கத்தை அடியோடு விட்டுவிட்டேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். தற்போது ஊர்வசி மகன், மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.