திருமணத்திற்குப்பின் ஹீரோக்களுடன் ரொமான்ஸ், கிளாமர் ட்ரெஸ்!! பங்கமான பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்..

Keerthy Suresh Gossip Today Indian Actress Tamil Actress
By Jai Nov 26, 2026 09:12 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த 2024ல் ஆண்டனி என்பவரை திருமணம் செய்தும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், திருமணத்திற்கு பின் மற்ற ஹீரோக்களுடன் ரொமான்ஸ் செய்வது குறித்து பதிலளித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து பிரபல நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயினாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த வாரம் அவர் நடிப்பில் சத்தியவான் சாவித்திரி படம் வெளியானது.

இதனையடுத்து நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ள, January 12 Vidudala என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். கடந்த 2024ல் தன்னுடைய நீண்டகால காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்தார் கீர்த்தி.

திருமணத்திற்கு பின் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ், கிளாமர் ரோலிலும் ஹீரோக்களுடன் ரொமான்ஸ் காட்சியிலும் நடித்து வருகிறார்.

கணவர் என்ன சொல்வது

இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியொன்றில், திருமணத்திற்கு பின் ஹீரோக்களுடன் ரொமான்ஸ், ட்ரெஸ்ஸிங் சென்ஸ் குறித்த கேள்விக்கு பங்கமான ஒரு பதிலை கொடுத்துள்ளார்.

அதில், என் அப்பா, அம்மாவே ஒன்றும் சொல்லமாட்டாங்க. இதில் கணவர் என்ன சொல்வது, எனக்கு பிடித்ததை நான் செய்து கொண்டுதான் இருப்பேன் என்று கூறினார். மேலும் கல்யாணத்திற்குப்பின் ஆட்டிட்டீயூட் காட்டுவதாகவும் சிலர் கூறுவது குறித்த கேள்விக்கு, அப்படி என்றால் என்ன? என்ற கேள்வியையும் எழுப்பி பதிலடி கொடுத்துள்ளார்.