காசுக்காக வயசு பார்க்காமல் டேட்டிங்-ஆ? கோபத்தில் சுஷ்மிதா சென் போட்ட கருத்து..

Gossip Today Bollywood Indian Actress
By Edward Jul 18, 2022 09:42 AM GMT
Report

முன்னாள் பிரபஞ்ச அழகி பட்டத்தை பெற்று பாலிவுட் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சுஷ்மிதா சென். தமிழில் ரட்சகன் படத்தில் நடித்தும் முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் போட்டும் இருந்தார்.

பின் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து தற்போது 46 வயதில் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். இரு பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். பல நட்சத்திரங்களுடன் டேட்டிங் சென்று சர்ச்சை நடிகையாகவும் திகழ்ந்து வந்தார்.

என் வாழ்வில் சில ஆண்களால் ஏற்பட்ட ஏமாற்றமே திருமணம் செய்யாததற்கு காரணம் என்று கூறியிருந்தார். தற்போது 58 வயதான முன்னாள் ஐபிஎல் போட்டியின் தலைவர் லலித் மோடியுடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார். சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு டேட்டிங் சென்றுள்ளதாகவும் திருமணம் கிடையாது என்றும் கூறியிருந்தார்.

காசுக்காக வயசு பார்க்காமல் டேட்டிங்-ஆ? கோபத்தில் சுஷ்மிதா சென் போட்ட கருத்து.. | Ushmita Sen Posts Perfect Response

இதனை மீடியாக்கள் கடுமையாக விமர்சித்து வந்துள்ளனர். தன்னை விமர்சித்து ட்ரோல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்து ஒரு பதிவினை போட்டுள்ளார். நான் நானாகவே இருக்கிறேன், அனைத்து வழிகளில் இருந்தும் பணம் சம்பாதிக்கிறேன் என்று சிலர் கூறுகிறார்கள், நன் தங்கத்தை விட ஆழமாக தோண்டுகிறேன்,

எப்போதும் வைரங்கலை விரும்புவேன். அதை நானே வாங்கிகொள்கிறேன், சுஸ் நன்றாக இருக்கிறார் புகழ் வெளிச்சத்தில் வசிப்பவள் அல்ல, நான் சூரியன், நானாகவும் எனது மனசாட்சியை மையப்படுத்தியே நான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.