மீனாட்சியுடன் ரொமான்ஸ்.. கடுப்பான ஆதி, அப்பத்தா எடுக்க போகும் முடிவு என்ன? - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்

Serials Tamil TV Serials
By Karthick Raja Sep 08, 2026 05:35 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆதி மற்றும் ரம்யா அப்பத்தாவை சந்தித்து பேசிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அப்பத்தா அவங்கள இந்த வீட்டுக்கு வந்தா நான் ஏத்துக்க ரெடி என வெறும் வாய் வார்த்தையாக சொல்லி விட்டு வரும்போது பாத்துக்கலாம் என மனதுக்குள் கணக்கு போடுகிறார்.

மீனாட்சியுடன் ரொமான்ஸ்.. கடுப்பான ஆதி, அப்பத்தா எடுக்க போகும் முடிவு என்ன? - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் | Vaagai Sooda Vaa Today Episode Sep 08 2026

இதையடுத்து ஆதியும் ரம்யாவும் சுமதி வீட்டுக்கு கிளம்பி வருகின்றனர். எப்படியாவது இருவரையும் பேசி அப்பத்தா வீட்டுக்கு அனுப்ப திட்டமிடுகின்றனர்.

இங்கே ஜீவா கையில் அடிபட்டு இருப்பதால் சட்டை போட முடியாமல் தவிர்ந்து கொண்டிருக்கு சுமதி ரொம்ப கஷ்டப்படுறாரு கொஞ்சம் உதவி பண்ணு என்று சொல்ல மீனாட்சி ஜீவாவுக்கு உதவி செய்ய முடிவு எடுக்கிறாள்.

அதற்கு முன்பாக கதவு மற்றும் ஜன்னல்களை சாத்திவிட்டு வர ஜீவா எதுக்காக எல்லாத்தையும் க்ளோஸ் பண்ற என்று கேட்க காத்து உள்ளே வரும் முடி பறக்கும்.. அதனால ரொமான்ஸ் சீன் உருவாகும் இதெல்லாம் தேவையா என்று சொல்கிறாள்.

மீனாட்சியுடன் ரொமான்ஸ்.. கடுப்பான ஆதி, அப்பத்தா எடுக்க போகும் முடிவு என்ன? - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் | Vaagai Sooda Vaa Today Episode Sep 08 2026

பிறகு ஜீவாவுக்கு சட்டை போட்டு விட்டு மீனாட்சி திரும்பும்போது கால் தடுக்கி கீழே விழப்போக ஜீவா தாங்கி பிடிக்கிறான். அப்போது கதவை திறக்க காற்று உள்ளே வர முடி பறக்க மீனாட்சி சொன்னது போலவே ஒரு ரொமான்ஸ் கிரியேட் ஆகிறது.

இந்த சமயத்தில் ஆதி வீட்டுக்குள் நுழைய இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்து மேலும் கடுப்பாகிறான். உடனடியாக ஏதாவது செய்து இருவரையும் பிரிக்க திட்டம் போடுகிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.