ரூ. 500 கோடிக்கும் மேல் நஷ்டத்தில் யஷ் படம்

Yash Box office Toxic
By Tony Sep 07, 2026 10:30 AM GMT
Report

யஷ் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துவிட்டார். அவரின் கேஜிஎஃப் படம் ஒன்றே, அவரின் புகழ் எப்படி இந்தியா முழுவதும் பரவியது என்று.

அதன் தொடர்ச்சியாக அவர் நடிப்பில் 'டாக்சிக்' படம் பிரம்மாண்டமாக கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில் கியாரா, நயன்தாரா, ருக்மிணி, ஹுமா, தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தது.

ரூ. 500 கோடிக்கும் மேல் நஷ்டத்தில் யஷ் படம் | Yash Toxic 500 Crore Loss

இந்நிலையில், டாக்சிக் படம் முதல் நாள் ரூ. 150 கோடி வசூல் செய்த நிலையில், தற்போது படம் வந்து 10 நாட்கள் ஆகிய நிலையில் ரூ. 350 கோடி தான் வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் தயாரிப்பாளர் தரப்பிற்கு இப்படம் ரூ. 500 கோடிக்கும் மேல் இப்படம் நஷ்டத்தை கொடுத்து இருக்கும் என கூறப்படுகிறது.