ஆணவத்தில் நடிகரை வளரவிடாமல் தடுத்த வடிவேலு! சமாதானம் செய்த பார்த்திபன்..பழித்தீர்த்த சேரன்..

Cheran Vadivelu R. Parthiban
By Edward Jun 14, 2022 07:14 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் நடிகைகள் சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்து தான் இருக்கிறார்கள். ஆனால் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வரும் கலைஞர்கள் கஷ்டப்பட்டு தான் இருக்கிறார்கள்.

கஷ்டத்தில் பெஞ்சமின்:-

அந்தவகையில் தமிழ் துரைப்படங்கள் சிறு கதாபாத்திரம் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகர் பெஞ்சமின். சமீபத்தில் அவரின் சிகிச்சைக்காக பணம் கேட்டு பேட்டிகொடுத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் இயக்குனர் பாலச்சந்தரின் நாடகத்தில் நடித்துள்ளார். அதில் தலைமை பொருப்பில் இருந்த பார்த்திபன் மூலம் தான் சினிமாவில் அறிமுகம் கிடைத்துள்ளது. மேடை நாடக கலைஞராக இருந்து பின் சேரன் இயக்கத்தில் வெளியான வெற்றிக்கொடிக்கட்டு படத்தின் மூலம் அறிமுகமாகினார் பெஞ்சமின்.

வடிவேலுவிடம் பிரச்சனை:-

படத்தில் வடிவேலுவை திட்டும் காட்சியில் நடித்திருப்பார். அப்படத்தில் வடிவேலு தனக்கு செய்த கஷ்டங்களையும் கூறியுள்ளார். வெற்றிக்கொடிக்கட்டு படத்தில் நடிக்க பார்த்திபனிடம் சென்றபோது என்னை பல நாட்கள் ஓரமாக உட்கார சொன்னார்கள். கடுப்பாகிய நான் சேரனிடம் சென்று நான் செல்கிறேன் என்று கூறினேன்.

வடிவேலு இன்னும் ஷூட்டிங்கிற்கு வரவில்லை அவருடன் தான் உனக்கு காட்சி என்று கூறி சமாதானப்படுத்தினார். வடிவேலுவும் வந்து என்னிடம் இவன் தான் புது பையனா ஒழுங்கா நடிப்பியா? பயப்படக்கூடாது என்று கூறினார்.

நா அதற்கு, நான் பாலசந்தரின் பள்ளியில் படித்தவன் பயமில்லை என்று கூறினேன். பின் சேரன் எங்களிடம் வந்து, படத்தின் பட்ஜெட்டை குறைப்பதற்காக 400 அடி ரீல் ரூபாய் 15000. அதனால் ஒரே டேக்கில் முடித்துவிட கூறினார். நானும் நடிக்க தயாராக, வடிவேலுவை திட்டும் காட்சிகள் படமாக்கப்பட்டது.

கடுமையாக திட்டிய மிரட்டிய வடிவேலு:-

ஆனால் வடிவேலும் என்னை டயலாக் பேசவே விடவில்லை. அவரே ஏதேதோ சொல்லிட்டு இருந்தார். 4 ரீல் இதனாலே முடிந்து விட்டதால் 60 ஆயிரம் ரூபாய் அப்படியே போய்விட்டது என்று சேரன் திட்டினார். நான் அவர்களிடம் சென்று கேமராவிற்கு பின்னால் வடிவேலு செய்யும் செயலை கூறினேன்.

இதனை பார்த்த பார்த்திபன் வடிவேலுவை காரில் கொஞ்சம் தூரம் சென்று வர சொன்னார். அதன்பின் அந்த காட்சி எடுக்கும் போது அவரை என்னவெல்லாம் திட்ட நினைக்கிறாயோ அதை திட்டு என்று கூறினார். நானும் அதன்பின் அந்த காட்சியை நடித்துகொடுத்தேன்.

வடிவேலு என்னிடம் வந்து என்னையா திட்டுன, நீ எப்படி ஊருக்கு போகிறாய் என்று பார்க்கிரேன் என்று கூறினார். பார்த்திபனும் வடிவேலுவை சமாதானம் செய்தார். அந்த காட்சியை வடிவேலு பார்த்து என்னிடம் இப்படியெல்லாம் என்னை திட்டி இருக்கியா என்றும் அந்த காட்சியை நீக்க கூறியும் சேரனிடம் கூறியுள்ளார் வடிவேலு.

ஆனால் சேரன் ஏற்கனவே பல காட்சிகள் நீக்கியாச்சு இது மட்டும் இருக்கட்டும் என்று அந்த காட்சியை கட் செய்யாமல் படத்தில் வைத்திருப்பதாக வடிவேலுவிடம் கூறிவிட்டார்.