தலைக்கனத்தில் வளர்ச்சி பிடிக்காத வடிவேலு! காமெடியன் செய்த காரியத்தால் ஓடிய வைகைபுயல்..
தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருந்தவர் நடிகர் வடிவேலு. 4 ஆண்டுகளாக நடிக்க தடை செய்து ரெட் கார்டு கொடுத்தனர். அதற்கு காரணமாக இருந்தது இம்சை அரசன் படத்தின் சங்கருக்கு ஏற்பட்ட கோடிக்கணக்கு நஷ்டம் தான்.
தற்போது அதையெல்லாம் சுமுகமான சமாதனப்படுத்திய பின் ரெட் கார்ட் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், லைக்கா நிறுவனத்தின் 5 படங்களில் கமிட்டாகி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது லைக்காவின் முதல் படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஒருமுறை ரெடின் கிங்ஸ்லி ஷூட்டிங்கிற்கு 2 மணி நேரம் தாமதமாக வந்துள்ளாராம். இதனால் கடுப்பாகிய வடிவேலு இப்ப வளர்ந்த நடிகருக்காக நான் காத்திருப்பதா என்று கூறி படப்பிடிப்பினை கேன்சல் செய்துவிட்டு சென்றுவிட்டாராம்.
இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் ரெடின் கிங்ஸ்லியை திட்டி வருகிறார்களாம். மேலும் அவரின் பெயரை கீழே இறக்க பல திட்டங்களையும் செய்து வருகிறார்களாம். 4, 5 படங்கள் நடித்து பிரபலமான ரெடின் வளர்ச்சியை பார்த்து வடிவேலு கொஞ்சம் பொறாமையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.