ஷிவானியை வைத்து மிகபெரிய ரிஸ்க் எடுக்கும் வடிவேலு! விஜய்க்கே செட்டாகல உங்களுக்கு எப்படி?
தமிழ் சினிமாவில் காமெடி லிஜெண்ட் என்று கூறப்படும் வைகைப்புயல் வடிவேலு சில ஆண்டுகளாக ரெட்கார்ட் போடப்பட்டு சினிமாவில் இருந்து விலக்கப்பட்டார். அந்த பிரச்சனை எல்லாம் முடிந்து இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
பல படங்களில் கமிட்டாகி இருக்கும் வடிவேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது என்று கூறப்பட்டது. பெரும்பாலும் படங்களில் 5 அல்லது 6 பாடல்கள் இருக்கும். ஆனால் படத்தின் நேரம் காரணமாக சில பாட்டுக்களை வெட்டி கடைசியில் படம் முடிந்த பிறகு போட்டுக்கொள்வார்கள்.
அதை டாக்டர், பீஸ்ட் படத்தில் கூட பார்க்கலாம். படத்தின் நேரத்தை கருத்தில் கொண்டு சில நடிகர்களின் படங்களில் பாடல்களையே வைக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள் இயக்குனர்கள்.
அப்படியாக வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வடிவேலு ஷிவானியுடன் ஆட்டம் போட்டுள்ளாராம். ஆனால் இப்பாடல் படத்தின் கடைசியில் தான் ஒளிப்பரப்பாகும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.