கிங்காங் மகள் திருமணத்திற்கு வராத வடிவேலு.. ஆனால் மொய் மட்டும் இத்தனை லட்சம்?

Tamil Cinema Vadivelu Tamil Actors
By Bhavya Jul 16, 2025 10:30 AM GMT
Report

கிங்காங் 

நடிகர் கிங்காங் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவருடைய உண்மையான பெயர் சங்கர். அதிசயப் பிறவி படத்தில் இடம் பெற்ற நடன காட்சி ஒன்றின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் கிங்காங்கின் மகள் கீர்த்தனாவுக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இதன் காரணமாக சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் வீடு தேடி சென்று திருமண அழைப்பிதழை கிங்காங் வழங்கி வந்தார்.

கிங்காங் மகள் திருமணத்திற்கு வராத வடிவேலு.. ஆனால் மொய் மட்டும் இத்தனை லட்சம்? | Vadivelu Gift To King Kong Daughter Marriage

இத்தனை லட்சம்?

இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். ஆனால், நடிகர் வடிவேலு வரவில்லை.

அதற்கு முக்கிய காரணம் அவர் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளதாலும், அங்கு படத்தின் டிஸ்கஷனில் இருப்பதன் காரணத்தினாலும் திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை என கூறியுள்ளார்.

இந்நிலையில், மணமக்களை மனதார வாழ்த்தி வடிவேலு, ரூ. 1 லட்சம் மொய் கொடுத்துள்ளார். இதை பேட்டி ஒன்றில் கிங்காங் பகிர்ந்துள்ளார்.

கிங்காங் மகள் திருமணத்திற்கு வராத வடிவேலு.. ஆனால் மொய் மட்டும் இத்தனை லட்சம்? | Vadivelu Gift To King Kong Daughter Marriage