சில Dogs-ஆல சீக்காளி ஆனேன்.. சங்கரை மறைமுகமாக தாக்கி பழிவாங்கும் வடிவேலு..

Vadivelu Shankar Shanmugam Gossip Today
By Edward Nov 15, 2022 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் காமெடி லெஜெண்ட் என்று அனைவராலும் புகழ்ந்து வைகைப்புயல் என்ற பெயரோடு கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் பாதியிலேயே வடிவேலு வெளியேறினார்.

ரெட் கார்ட் - நாய் சேகர் ரிட்டர்ஸ்

அப்படத்தினை தயாரித்த பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்மீது புகாரளித்திருந்தார். இதனால் வடிவேலுவுக்கு சில காலம் ரெட் கார்ட் போடப்பட்டு நடிக்கவிடாமல் செய்தனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்த பிரச்சனையை சரி செய்யவே சங்கர் - வடிவேலு சுமுகமான முடிவை எடுத்து ரெட் கார்டு கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது.

இதன்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்த வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ஸ் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் சந்திரமுகி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் வருகிறார்.

அப்பத்தா

இந்நிலையில் நேற்று நாய்சேகர் ரிட்டர்ஸ் படத்தின் சிங்கிள் பாடலான ’அப்பத்தா’ இணையத்தில் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையில் பிரபுதேவா நடன அமைப்பில் அசல் கோளார் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்.

வடிவேலுவே பாடிய அப்பத்தா பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் அப்பாடலின் ஒரு வரி சர்ச்சைக்குள்ளானது. ”நான் உண்டு என் வேலை உண்டுனு இருந்தேன், நாய்-யால நான் சீக்காளி ஆனேன்” என்ற வரியை சங்கர் ஏற்படுத்திய பிரச்சனையை மறைமுகமாக வைத்துள்ளதாக நெட்டிசன்கள் கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

Gallery