மன்னிப்பு கேட்க சென்ற நடிகர்!! ஆணவத்தில் சக நடிகரை எட்டி உதைத்து வெளியில் தள்ளிய வடிவேலு!

Vadivelu
By Edward Apr 10, 2023 09:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக திகழ்ந்து வைகைப்புயல் என்ற அங்கீகாரத்தை பெற்று புகழப்பட்டு வருபவர் வடிவேலு. சில ஆண்டுகளுக்கு முன் ரெட் கார்ட் போடப்பட்டு சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார்.

அதன்பின் பல பிரச்சனைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு, திரும்பவும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதற்கெல்லாம் காரணம் வடிவேலுவின் தலைக்கனமும் ஆணவமும் தான் என்று அவருடன் நடித்த நடிகர்கள் கூறி வருகிறார்கள்.

மன்னிப்பு கேட்க சென்ற நடிகர்!! ஆணவத்தில் சக நடிகரை எட்டி உதைத்து வெளியில் தள்ளிய வடிவேலு! | Vadivelu Kick Bonda Mani Out From Home Behind

அப்படி சிங்கமுத்து, போண்டா மணி உள்ளிட்ட நடிகர்களும் அவரால் பாதிக்கப்பட்டு வந்தனர். அந்தவகையில் நடிகர் போண்டா மணி, சிங்கமுத்துவும் வடிவேலுவும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.

இது வடிவேலுவுக்கு பிடிக்காமல் போக, உடனே போண்டா மணி அவருக்கு கால் செய்து பேசியிருக்கிறார்.

போனில் போண்டா மணியை அசிங்கமாக திட்டியதோடு நேரில் மன்னிப்பு கேட்க வந்தபோதும் திட்டி எட்டி உதைத்து வெளியில் தள்ளியிருக்கிறாராம்.

இதனை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் போண்டா மணி தெரிவித்திருக்கிறார்.