ஏன் பஞ்ச பாட்டு பாடுறீங்க.? டப்பு வேண்டுமா வேண்டாமா? கிழித்து தொங்க விடும் வடிவேலு

lyca vadivelu\vaigaipuyal
By Edward Feb 27, 2022 10:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களில் முக்கியமாக இருந்தவர் நடிகர் வடிவேலு. தனக்கென ஒரு முகப்பாவனையுடன் தான் எது செய்தாலும் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று பல நூறு படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் வைகைபுயல். சில ஆண்டுகளுக்கு முன் சங்கர் படத்தில் கமிட்டாகி அப்படத்தில் ஏற்பட்ட சில சலசலப்பால் வடிவேலு வெளியேறினார். இதனால் பல கோடி நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் சங்கர் புகாரளித்து ரெட் கார்ட் கொடுத்து அனுப்பட்டார் வடிவேலு.

தற்போது அந்த விஷயம் முடிவுக்கு வர வடிவேலும் ரிடர்ண்ட் என்ற பெயரில் வடிவேலு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். மேலும் லைக்கா நிறுவனத்துடன் 4 படங்களில் நடிக்கவும் கமிட்டாகினார். தற்போது நாய் சேகர் ரிட்டர்ஸ் படத்தில் நடித்து வரும் வடிவேலும் கொரோனா தொற்றுக்கு பிறகு மும்முரமாக படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அப்படத்திற்காக நடிகைகளின் தேர்வு வெளிநாட்டு நடிகைகளை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்நிலையில், நாய் சேகர் படக்குழு படத்தை மிக பிரம்மாண்டமாக வடிவேலுவின் கம்பேக் திரைப்படமாக அமைய வேண்டும் என்று மிகப்பெரிய உழைப்பை போட்டு எடுத்து வருகிறார். அதற்காக பல மாநிலங்களில் அரண்மனை போன்ற வீட்டிற்கு அதிக கோடியில் செலவையும் வைத்துள்ளார். இதற்கு கோபத்தில் இருக்கிறதை வைத்து படத்தினை எடுங்கள் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதாம்.

இதனால் கடுப்பாகிய வைகைப்புயல். படம் மட்டும் நன்றாக வரவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இப்படி சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட கணக்குப் பார்த்தால் எப்படி ஒரு முழு நீள நல்ல படத்தை எடுத்து கொடுக்க முடியும் என்று படக்குழு திணறி வருகிறது. இந்த லாஜிக்கை மட்டும் புரிந்துகொள்ள ஏன் தயாரிப்பாளர்கள் முன்வருவதில்லை என்று இயக்குனர் புலம்பி வருகிறாராம்.