அந்த டைரக்டரால் தான் சினிமாவ விட்டு போன.. சிகரெட் உறிஞ்சிட்டே!! உண்மையை உடைத்த வைகைப்புயல்

Vadivelu Gossip Today Tamil Directors
By Edward Apr 22, 2025 01:30 PM GMT
Report

வைகைப்புயல் வடிவேலு

தமிழ் சினிமாவில் காமெடி லெஜண்ட்டாக திகழ்ந்து வரும் வைகைப்புயல் வடிவேலு பல ஆண்டுகள் கழித்து இயக்குநர் சுந்தர் சியுடன் இணைந்து கேங்கர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தவாரம் ஏப்ரல் 24ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வருகிறார் வடிவேலு. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் இருந்து விலக ஒரு இயக்குநர் செய்த டார்ச்சர் தான் என்று கூறியிருக்கிறார்.

அந்த டைரக்டரால் தான் சினிமாவ விட்டு போன.. சிகரெட் உறிஞ்சிட்டே!! உண்மையை உடைத்த வைகைப்புயல் | Vadivelu Openup About His Ban On Shooting Director

பெரிய இயக்குநர்

நகைச்சுவை காட்சிகளை இம்ப்ரூப் பண்ண விரும்பாத இயக்குநர்களிடம் வேலை செய்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு நகைச்சுவை ஒன்றும் கல்வெட்டு கிடையாது. ஒருமுறை ஒரு பெரிய இயக்குநர் கிட்ட அப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஸ்கிரிப் பார்த்துவிட்டு அதில் டெவலப் பண்ணி நான் சொல்லசொல்ல, அவர் சிரிச்சிட்டே இருந்தாரு. ஒரு கட்டத்தில் இல்லண்ணே, பேப்பருல டைப் பண்ணியாச்சி, அதுல என்ன ஒருக்கோ அத மட்டும் பேசுங்க என்று சொன்னார்.

அந்த டைரக்டரால் தான் சினிமாவ விட்டு போன.. சிகரெட் உறிஞ்சிட்டே!! உண்மையை உடைத்த வைகைப்புயல் | Vadivelu Openup About His Ban On Shooting Director

அப்படியா டெவலப் பண்ண வேண்டாமா? என்று நான் கேட்க, இல்ல வேண்டாம், அதுல உள்ளத மட்டும் பண்ணுங்க என்று சொன்னார். பெரிய டைரக்டர், அவருக்கும் எனக்கு தான் பிரச்சனை நடந்துட்டு இருந்துச்சு, அவரால் தான் 2, 3 வருஷமா நடிக்காமல் இருந்தேன். இதுக்கு மேல அவர் பெயரை சொல்ல விரும்பல, உங்களுக்கே தெரியும்.

அண்ணே நகைச்சுவை, கல்வெட்டு கிடையாது, அது எமோஷ்னல் என்ற சொன்னதுக்கு, சிகரெட் உறிஞ்சிகிட்டே, இல்ல சார், நான் ரொம்ப சோகமா இருக்கேன், அதுல என்ன இருக்கோ அத மட்டும் பண்ணுங்கன்னு சொன்னார்.

அதோட அவர்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிட்டேன். அதுக்கப்புறம் ஷூட்டிங் வந்தாலே, பிரச்சனை பண்றதுக்குண்ணே வந்துட்டான்யான்னு கெட்ட வார்த்தை போட்டுதிட்ட ஆரம்பிச்சாங்க. இப்படியே நம்ம மேலே பழியபோட்டுவிட்டாங்க. இருந்தாலும் மக்களோட ஆதரவால இப்போ கேங்கர்ஸ் படத்துல நடிச்சிருக்கேன் என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.