ரெட் கார்ட்-க்கு பின் பெரிய ஹீரோக்களுக்கு ஆப்புவைக்கும் வைகைபுயல்.. வடிவேலுவால் மாட்டி முழிக்கும் தயாரிப்பாளர்கள்..

Vijay Sethupathi Vadivelu
By Edward Nov 03, 2022 08:59 AM GMT
Report

காமெடிக்கே பேர் போன நடிகராகவும் வைகைப்புயலாகவும் திகழ்ந்து வருபவர் வடிவேலு. சில ஆண்டுகளுக்கு முன் படங்களில் நடிக்க ரெட் கார்ட் போட்டு சினிமாவில் இருந்து ஒதிக்கி வைத்திருந்தார்கள். இதனையடுத்து அந்த பிரச்சனையெல்லாம் சமாளித்து ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார்.

சந்திரமுகி 2

அப்படி லைக்கா நிறுவனத்துடன் பல படங்களிலும் நடித்தும் நடிக்கவும் உள்ளார். அந்தவகையில் சந்திரமுகி 2 வில் நடித்தும் வருகிறார். மேலும், 5, 6 படங்களில் முன்னணி நாயகனாக நடித்து வந்தாலும் இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை. உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வடிவேலு தற்போது விஜய் சேதுபதியின் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.

5 கோடி சம்பளம்

இதற்காக படக்குழு வடிவேலுவை சந்தித்தவர்களிடம் விஜய் சேதுபதியுடன் இணைந்தே நடிக்க வேண்டும் என்றால் சுமார் 5 கோடி தர வேண்டும் என்று கண்டீசன் போட்டுள்ளாராம். இதனை கேட்ட தயாரிப்பாளர் ஷாக்காகி இருக்கிறார்ம். முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக பிட்டை போட்ட வடிவேலு போறப்போக்கை பார்த்த முன்னணி ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்தை கேட்பாரோ என்று புலம்பியும் இருக்கிறார். இந்த அளவிற்கு அவர் சம்பளம் கேட்க அவரது மார்க்கெட் ஒன்றும் பழைய ஃபார்ம்மும் தான் காரணம் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.