எல்லாத்துக்கும் சூப்பர் ஸ்டார் தான் காரணம்! ரஜினிகாந்த் வடிவேலுக்கு இப்படியொரு விஷயம் செய்தாரா?

1 மாதம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் வைகைப்புயல் என்ற பெயரை பெற்றவர் நடிகர் வடிவேலு. அவர் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ அவர் காமெடி மிகப்பெரியளவில் வெற்றியடையும்.

அந்த அளவிற்கு நடித்து வந்த வைகைப்புயல் சிலரிடம் ஏற்பட்ட பிரச்சனையால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு சினிமாவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். தற்போது அந்த பிரச்சனை சரியானப்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் ரஜினிகாந்த் பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார். சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டாருடன் வடிவேலு நடித்திருந்தது மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றது. இருவரின் காமினேஷனும் மக்கள் மத்தில் சிறப்பாக கவர்ந்தது.

அந்த அளவிற்கு சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் ஸ்கிரிப்ட் சரியான அமைந்தது. இந்த படத்தில் வடிவேலு நிறைய நகைச்சுவை ஸ்கிரிப்ட்டுகளை சொல்லி இருக்கிறார். ஆனால் அதையெல்லாம் சூப்பர் ஸ்டாரை வைத்து எடுக்க முடியுமா, அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று ஒரு சந்தேகம் இருந்தது.

இதை ரஜினியிடம் கூறியதும் நன்றாக இருக்கிறது. இதை நாம் பண்ணுகிறோம் என்று ரஜினியாகவே நிறைய விஷயத்தில் வடிவேலுவை ஊக்குவித்து இருக்கிறார். சந்திரமுகி படத்தில் அந்த மாதிரி நகைச்சுவை காட்சிகள் நன்றாக அமைந்ததற்கு காரணம் சூப்பர் ஸ்டார் தான்.

அவர் இல்லை என்றால், ஒருவேளை ரஜினி மட்டும் என்னை சுதந்திரமாக அந்தப்படத்தில் செயல்பட விடாமல் செய்திருந்தால் சந்திரமுகி திரைப்படத்தில் இந்த மாதிரி நகைச்சுவைகள் அந்த படத்திற்கு அமைந்திருக்காது என தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.