தலைக்கனத்தால் தர்ம அடி வாங்கிய வைகைப்புயல்? வடிவேலுவை பகைத்துக்கொண்ட ஜாம்பவான்கள்..
வடிவேலு
தமிழ் சினிமாவில் காமெடி லெஜண்ட்டாக திகழ்ந்து வரும் வைகைப்புயல் வடிவேலு, சில ஆண்டுகளாக ரெட் கார்ட் போடப்பட்டு தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபகாலமாக அவர் பற்றிய நெகட்டிவ் கருத்துக்கள் எழுந்து வந்தநிலையில் வடிவேலு சில முன்னணி நடிகர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அவர்களுடன் தற்போது வரை நடிக்காமல் இருக்கிறார். அவர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்..
90ஸ் காலக்கட்டத்தில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபனுடன் இணைந்து நடித்து, ரசிகர்களை கவர்ந்து வந்தார் வடிவேலு. குண்டக்க மண்டக்க படத்தின் போது இருவருக்கும் ஏற்பட்ட மன கசப்பு ஏற்பட்டு தகராறும் ஏற்பட்டு இன்று வரை சேராமல் இருந்து வருகிறார்கள்.
தர்ம அடி
வடிவேலுவின் வளர்ச்சியில் பெரிய பங்காற்றிய கேப்டன் விஜயகாந்துடன் சில சம்பவங்களால் பகையை ஏற்படுத்திக்கொண்டார். இச்சம்பவம் அப்போதைய காலக்கட்டத்தில் பெரியளவில் பேசுபொருளாக மாறியது. மேலும், கேப்டனை சீண்டியதால் அவரது தொண்டர்கள் வடிவேலுவை அடித்து தர்ம அடி கொடுத்ததாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
படிக்காதவன் படத்தின் போது தனுஷ் காலை பிடிக்கும் ஒரு சீனில் நடிக்க வேண்டியிருப்பதை ஒத்துக்கொள்ள முடியாது என மறுத்ததாக கூறப்பட்டது. நான் பெரிய காமெடி நடிகர், இப்படி செய்ய முடியாது என்று கூறி பிரச்சனையும் செய்திருக்கிறார் வடிவேலு. அப்போது அவருக்கும் தனுஷுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் சேர்ந்து நடிக்காமல் வருகிறார்கள்.
கந்தசாமி படத்தின் போது காமெடி காட்சிகள் மிகுந்த பேசுபொருளாக இருந்தது. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு ஒரு நேரத்தில் விக்ரம் மீது கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் விக்ரமுடம் வடிவேலு இணைந்து நடிப்பதில்லை.
ராஜா படத்தில் அஜித்திடம் மரியாதையில்லாத விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அஜித்துக்கும் வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் விலகி, படங்களில் இணைந்து நடிப்பதை தவிர்த்து வருகிறார்கள்.