வடிவேலுவுக்கே விபூதி அடிச்சிட்டாங்களே!! டாக்டர் பட்டத்துக்காக நம்பி ஏமாந்து போன வைகைப்புயல்..

Vadivelu
By Edward Feb 28, 2023 12:22 PM GMT
Report

பெரும்பாலும் சினிமா பிரபலங்களுக்கு சமீபகாலமாக டாக்டர் படம் வழங்குவது அதிகரித்துள்ளது.

அப்படி அண்ணா பல்கலைகழகம் என்று கூறிக்கொண்டு, வடிவேலு, தேவா, சாண்டி, ஈரோடு மகேஷ் உள்ளிட்ட பலருக்கு சமீபத்தில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியை முன்னாள் நீதிபதியை வைத்து பட்டத்தையும் வழங்கியிருக்கிறார்கள்.

மேலும் நிகழ்ச்சிக்கு வராத வடிவேலுவை நேரில் சந்தித்த நபர்கள், போலி ஆவணத்தையும் கொடுத்துள்ளார்கள்.

அதையும் நம்பிய வடிவேலு எம்ஜிஆர் பாட்டை பாடி நன்றியை தெரிவித்திருக்கிறார். வடிவேலுவுக்கே விபூதி அடித்த நபர்கள் மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.