காதலிக்காக பாக்யராஜை கைக்குள் வைத்திருந்த பிரபல நடிகை.. தூது வேலை பார்த்து மாட்டிய வடிவுக்கரசி..
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அறிமுகம் செய்து வைத்து டாப் இடத்திற்கு சென்றவர்களில் ஒருவர் நடிகை வடிவுக்கரசி. சிகப்பு ரோஜாக்கள் படத்தில் அறிமுகமாகிய வடிவுக்கரசி 80, 90களில் கொடிக்கட்டி பறந்தார். பின் ஹீரோயின் வாய்ப்பில்லாமல் குணச்சித்திர ரோலிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
கன்னி பருவத்திலே
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கன்னி பருவத்திலே படத்தில் இயக்குனர் BV பாலகுரு இயக்கத்தில் நடித்தது பற்றியும் அப்படத்தில் பாக்யராஜ் எப்படி நடந்து கொண்டார், அவரது முதல் மனைவி ரவீனா பற்றியும் பகிர்ந்துள்ளார். நடிகர் ராஜ் கிரண் அலுவலத்திற்கு என்னை நானி சார் கூப்பிட்டார். அங்கு சேலையில் பாக்யராஜ் வரணும் என்று கூறினார். விஜயகாந்த் சார் தான் நடிகர் ராஜேஷ் ரோலில் நடிக்கவிருந்தார். அங்கு நான் செல்லும் போது விஜயகாந்த் சார் இருந்தார், ஆனால் அவர் தான் விஜயகாந்த் என்று எனக்கு தெரியாது.
வடிவுக்கரசியும் பாக்யராஜும் காதல்
30 நாள் கால்ஷீட் கொடுத்து திருச்சிக்கு சென்றோம். எனக்கு டயலாக் எல்லாமே பாக்யராஜ் தான் சொல்லி கொடுத்தார். அப்போது பிரவீனாவுக்கு பாக்யராஜுக்கும் காதல் பற்றி விசயங்கள் சென்று கொண்டிருந்தது. என்னை பார்க்க வருவது போல் பாக்யராஜை பார்ப்பார். பாக்யராஜ் யாராவது ஒரு பொண்ணிடம் பேசினால் உடனே ரவீனாவுக்கு சொல்லிடுவேன்னும் மிரட்டுவேன். எனக்கு மட்டும் அம்பாஸ்டர் கார் கொடுத்து அனுப்புவார்கள். அப்போது பாக்யராஜ் சாரை காரில் ஏற்றி சென்ற போது பிரவீனாவை பற்றி பேசிட்டு வருவார். இதை சிலர் ராஜ்கிரண் சாருக்கு கால் செய்து வடிவுக்கரசியும் பாக்யராஜும் காதல் பண்றாங்க என்று போட்டுக் கொடுத்துள்ளார்கள்.
ராஜ் கிரண்
ஒருநாள் நைட், ஒரு காட்சி எடுக்கும் போது ராஜ் கிரண் வந்தார். அப்போது ராஜ் கிரண், இங்க அவ அவ என் காசுல எல்லோரும் ஹனிமூன் கொண்டாடுறீங்களான்னு கோபத்தில் கேட்டார். நான் உடனே அங்கிருந்த சேரை எடுத்து தூக்கி வீசினேன். என்னை பற்றி அப்போதைய ராஜ்கிரணின் மனைவி அனு வேலை தான் இருக்கும் என்று புரிந்தது. அப்படி கோபத்தில் கத்தினேன். இதை பலர் எனக்கு பேய் பிடித்ததுன்னு சொல்லிட்டாங்க. அப்போது அந்த செய்தி பெரியளவில் பேசப்பட்டது என்று வடிவுக்கரசி கூறியிருக்கிறார்.