சூப்பர் ஸ்டாரை திட்டியதால் ரசிகர்களால் அவமானப்பட்ட பிரபல நடிகை.. வேறுவழியில்லாமல் மன்னிப்பு கேட்ட சம்பவம்

Rajinikanth Gossip Today
By Edward Sep 06, 2022 10:25 AM GMT
Report

தமிழ் சினிமாவை தாண்டி உலகம் முழுவதும் தன்னுடைய ஸ்டைலான நடிப்பாலும் நடையால் பலக்கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்ற இடத்தினை தற்போது வரையில் கையில் வைத்து வரும் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

தற்போது ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் நடிகை வடிவுக்கரசி சமீபத்தில் பேட்டியொன்றில் ரஜினியுடன் நடித்ததையும் சில சங்கடமான சம்பத்தையும் பகிர்ந்துள்ளார்.

சூப்பர் ஸ்டாரை திட்டியதால் ரசிகர்களால் அவமானப்பட்ட பிரபல நடிகை.. வேறுவழியில்லாமல் மன்னிப்பு கேட்ட சம்பவம் | Vadivukkarasi Remembering About Rajinikant

விருமன் படத்தில் அப்பத்தாவாக நடித்துள்ள வடிவுக்கரசி இதேபோல் சூப்பர் ஸ்டாரின் அருணாச்சலம் படத்திலும் அவருக்கு கூன் விழுந்த கோபக்காரி அப்பத்தாவாக நடித்திருப்பார்.

மிரட்டும் குரலில் அவர் நடித்திருந்தது அப்போதைய காலக்கட்டத்தில் பெரிய விமர்சனமாக எழுந்தது. படத்தில் ரஜினியை பார்த்து அனாதை நாயே வெளியே போ என்ற வசனம் அமைந்தது. இதற்கு அவரது ரசிகர்கள் தியேட்டரிலேயே வடிவுக்கரசியை திட்டித்தீர்த்து வந்தனர்.

இந்நிலையில், அந்த காட்சியில் நான் நடித்ததை பார்த்து, என்னை பாரட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டினார். அந்த மாதிரி நடித்ததால், அவர்களது ரசிகர்கள் நான் வந்த ரயிலை மறித்து நிறுத்தியுள்ளனர்.

சூப்பர் ஸ்டாரை திட்டியதால் ரசிகர்களால் அவமானப்பட்ட பிரபல நடிகை.. வேறுவழியில்லாமல் மன்னிப்பு கேட்ட சம்பவம் | Vadivukkarasi Remembering About Rajinikant

என்ன ஆச்சி என்று குழப்பத்தில் பரபரப்பாகினேன். அப்போது டிடிஆர் என்னிடம் வந்து, ரஜினியை திட்டிட்டீங்களாமே ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்களாம்.

அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமாம் என்று கூறினார். பின் அவர்களிடம் சென்று மன்னிச்சிடுங்க இனிமே செய்யமாட்ட என்று சொன்னப்பிறகு தான் அவர்கள் விலகினார்கள் என்று கூறியுள்ளார் வடிவுக்கரசி.