திருமணமாகி ஒரே வாரத்தில் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவி எமோஷ்னல்!! கணவர் கொடுத்த ரியாக்ஷன்..
வைஷ்ணவி - வெற்றி வசந்த்
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பொன்னி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் நடிகை வைஷ்ணவி சுந்தர். கடந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் வெற்றி வசந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விமரிசையாக நடந்த இவர்களின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்து கூறி வந்தனர். திருமணத்திற்கு பின் பொன்னி சீரியல் ஷூட்டிங்கில் மீண்டும் கலந்து கொண்டிருக்கிறார் வைஷ்ணவி.
சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் வெற்றி வசந்த் உடன் எடுத்த திருமண புகைப்படத்தோடு ஒரு எமோஷ்னல் பதிவை வெளியிட்டுள்ளார். என்னை மிகவும் நேசித்ததற்கு நன்றி, என் முகத்தில் இந்த அளவிற்கு மகிழ்ச்சியை நான் பார்த்ததில்லை.
அந்த மகிழ்ச்சிக்கு நன்றி, என் காதல் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டிருக்கிறது என்று ஆரம்பித்த வைஷ்ணவி தனது கணவரை புகழ்ந்து எமோஷ்னலாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இதற்கு அவரது கணவர் வெற்றி வசந்த், ஐ லவ் யூ மா என்றும் ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.