வலிமை இந்த படத்தின் காப்பியா? நீங்களே இப்படி செய்யலாமா வினோத்..
நடிகர் அஜித் நடிப்பில் நேற்று வெளியான படம் வலிமை. 3 வருடங்களுக்கு பிறகு வெளியாகிய இப்படத்தின் எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்து ரசிகர்கள் கொண்டாட்டத்தோடு படத்தை பார்த்து வருகிறார்கள். சிலர் நல்ல விமர்சனங்களை கொடுத்து வந்தாலும் எதிர்மறை விமர்சனங்கள் இணையத்தில் கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.
இந்நிலையில் எச் வினோத் இயக்கிய இப்படம் ஒரு படத்தின் காப்பியாக இருக்கிறது என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். வால்டர் வெற்றிவேல் படத்தின் அட்ட காப்பிதான் வலிமை படம் என கூறியுள்ளார். பி வாசு இயக்கத்தில் சத்யராஜ், சுகன்யா நடிப்பில் வெளியான திரைப்படம் வால்டர் வெற்றிவேல்.
இப்படத்தில் சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அதேபோல் வலிமை படத்தில் அஜித்தும் போலீஸ் அதிகாரியாக இருப்பார். இரு படங்களுக்கும் ஸ்டண்ட் காட்சிகள் தான் வித்யாசமாக இருக்கும் மற்றபடி இரண்டும் ஒறே மாதிரியான படம் தான் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
H vinoth..... ???#ValimaiDisaster pic.twitter.com/xpWfbmzGDk
— beast mood... (@SriniSr52935101) February 24, 2022