வலிமை படத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட மாஸ் காட்சி.. இத ஏண்டா எடுத்தீங்கன்னு கதறும் ரசிகர்கள்

valimai ajith kumar deleted scene
By Kathick Mar 01, 2022 03:30 PM GMT
Report

கடந்த வாரம் அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் வலிமை. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் இப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். முதல் நாள் திரையிட இப்படத்தை பார்த்துவிட்டு, சிலர் படத்தின் ரன் டைம் படத்திற்கு மைனஸ் என்று கூறினார்கள்.

இதனால், படக்குழு அதில் அதிரடியான ஆக்ஷன் எடுத்து, படத்திலிருந்து 14 நிமிட காட்சிகளை தூக்கினார்கள். இதன்பின், வலிமை படம் பார்த்த பலரும் சூப்பராக இருக்கிறது என்று கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வலிமை படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளின் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியாகி வருகிறது.

அதில் இரண்டாவதாக வலிமை படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியின் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. அஜித் செம மாஸாக வலிமை படத்தில் பேசியிருந்த வசனத்தை படத்திலிருந்து தூக்கியுள்ளது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியைகொடுத்துள்ளது . இந்த வீடியோவை பார்த்ததும், அஜித்தின் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள். இதோ அந்த வீடியோ..