என்னடா சொல்லறீங்க வலிமை படம் நஷ்டமா.. உண்மையை உடைத்த முக்கிய நபர்
valimai
box office
ajith kumar
By Kathick
அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வலிமை. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், வசூலில் பின்தங்கி தோல்வியை சந்திக்கவுள்ளது என்பது போல், பல செய்திகள் உலா வந்தன.
ஆனால், அது உண்மையான தகவல் இல்லை என்பது போல் சில தகவல் வெளிவந்தன. இந்நிலையில், அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செங்கல்பட்டு விநியோகஸ்தர் உண்மையான வசூல் நிலவரத்தை கூறியுள்ளார்.
அதன்படி, வலிமை படம் தான், இந்த ஆண்டின் முதல் அதிக வசூல் செய்த திரைப்படம் என்றும், வலிமை படத்தால் எந்த ஒரு நஷ்டமும் ஏற்படவில்லை. வலிமை சூப்பர்ஹிட் திரைப்படம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். இதன்முலம், வலிமை திரைப்படம் நஷ்டமடையவில்லை என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது.