வலிமை பட இயக்குனருக்கு குழந்தை பிறந்தது! அப்பா ஆனார் வினோத்!
ajith
vionth
valimai
By Jon
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியவர் ஹெச்.வினோத். பாலிவுட் சினிமாவை சேர்ந்த போனிகபூர் இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித், வினோத், போனி கபூர் என கூட்டணி அமைந்துள்ளது.
வலிமை என பெயரிடப்பட்டுள்ள இப்படம் அஜித் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. படப்பிடிப்பும் வட மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு வந்த போதிலும் ஏதாவது புகைப்படங்கள், வீடியோக்கள் லீக்காகி விடுகின்றன..
இந்நிலையில் தற்போது இயக்குனர் வினோத்தின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வினோத்திற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.