மரணத்தைவிட கொடுமையானது அதுதான்..யாரும் என்னோட இல்ல.. இயக்குநர் பாலா எமோஷ்னல்..
இயக்குநர் பாலா எமோஷ்னல்
இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த இரு ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் சூர்யா படத்தில் இருந்து விலகி அருண் விஜய் நடித்து வந்தார். படம் முடிந்து வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2025 ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக பாலா பல பேட்டிகளில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.
துரோகம்
அதில், வாழ்க்கையில் நிறைய துரோகங்களை பார்த்திருக்கிறேன். ஒருசில துரோகங்களை மன்னிட்டுவிடுவேன், ஒருசில துரோகங்களை மரணத்தில் இருக்கும்போது கூட மன்னிக்க மாட்டேன், மறக்கவும் மாட்டேன். அந்த துரோகம் என்ன என்று இப்போது சொல்லமுடியாது.
காதல்
காதல் என் வாழ்க்கையிலும் வந்தது, ஆனால் வந்ததே தெரியாமல் போய்விட்டது. முன்பு காதல் என் வாழ்க்கையில் இருந்தது, ஆனால் காதல் அப்போது அந்நியப்பட்டுவிட்டது இப்போது என் வாழ்க்கையில் காதல் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
தனிமை
மேலும் தனிமையாக இருப்பது எனக்கு எப்போதும் பிடிக்கும், ஆனால் சில நேரம் யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனசு ஏங்கும் என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார் இயக்குநர் பாலா.