வீட்டை விட்டு ஓடிப்போக நினைத்தோம்.. கீர்த்தி சுரேஷ் போட்டுடைத்த ரகசியம்

Keerthy Suresh Marriage Tamil Actress
By Bhavya Jan 02, 2025 01:00 PM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன்பின் ரஜினி முருகன், பைரவா, மகாநதி, சர்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி தற்போது ஹிந்தி சினிமாவிலும் வலம் வர தொடங்கி விட்டார். அவர் நடித்த பேபி ஜான் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது.

வீட்டை விட்டு ஓடிப்போக நினைத்தோம்.. கீர்த்தி சுரேஷ் போட்டுடைத்த ரகசியம் | Actress Keerthy About Her Love

தமிழில் ஹிட் ஆன தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் பேபி ஜான். பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு இருந்தாலும் எதிர்பார்த்த வசூல் பெறாமல் தோல்வி அடைந்தது.

சமீபத்தில், தனது 15 வருட காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கீர்த்தி அவருடைய காதல் கதை குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

ரகசியம் 

அதில், " ஆர்குட் என்ற சமூக வலைத்தளம் மூலம் தான் முதன் முதலில் பேச ஆரம்பித்தோம். அதன் பின், தொடர்ந்து பேச தொடங்கினோம். ஒரு நாள் அவரிடம் தைரியம் இருந்தால் என்னிடம் புரபோஸ் செய்யுமாறு கூறிவிட்டேன்.

கடந்த 2010-ம் ஆண்டு முதன்முறையாக அவர் என்னிடம் காதலை வெளிப்படுத்தினார். நாங்கள் முதலில் வீட்டை விட்டு ஓடிப்போக நினைத்தோம்.

வீட்டை விட்டு ஓடிப்போக நினைத்தோம்.. கீர்த்தி சுரேஷ் போட்டுடைத்த ரகசியம் | Actress Keerthy About Her Love

எனக்கு அவர் ஒரு மோந்திரத்தை கொடுத்தார் நான் இன்றுவரை அதை கழட்டவில்லை. அந்த மோந்திரம் என்னுடைய திருமணத்திலும் இருந்தது. அதை நீங்கள் என்னுடைய அனைத்து படங்களிலும் காண முடியும்" என்று கூறியுள்ளார்.