இந்த சீரியல் நடிகையா? என்னை தூக்கி எறிந்த நடிகர்களே அதிகம்.. நடிகை வாணி போஜன்..

Vani Bhojan Serials
By Edward Aug 21, 2022 09:15 PM GMT
Report

செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் சின்னத்திரையில் தெய்வத்திருமகள் சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை வாணி போஜன். இந்த சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற வாணி போஜன் ஓ மை கடவுளே என்ற வெள்ளித்திரை படத்தில் நடிகையாக அறிமுகமாகினார்.

அதன்பின் சிறு சிறு ரோலில் நடித்து கதாநாயகியாக நடித்து வந்த வாணி போஜன் சமீபத்தில் விக்ரம் நடித்த மகான் படத்திலும் நடித்தார். அவரின் காட்சிகள் படத்திற்கு தேவையில்லை என்று வாணி போஜனின் ஹாட் காட்சிகளை நீக்கி விட்டனர்.

இதன்பின் ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த வாணி போஜன் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். அதன் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் வாணி, தன்னை கஷ்டப்படுத்திய சில சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் ஆடிஷனுக்கு சென்று கலந்து கொண்டும் இவங்க சீரியல் நடிகை அதனால வேண்டாம் என்று பல நடிகர்கள் என்னை தூக்கி எறிந்துள்ளனர். சீரியலில் நடித்த போது அப்படி என்றால் அதன்பின் சீரியலை முடித்து விட்டு பல வாய்ப்புக்காக காத்திருந்துள்ளார் வாணி போஜன்.

அப்படி கிடைத்தது தான் ஓ மை கடவுளே பட வாய்ப்பு என்று உணர்ச்சி பூர்வமாக கூறியுள்ளார் நடிகை வாணி போஜன்.