ஜெய்யை தொடர்ந்து அந்த நடிகருடன் தொடர்ந்து லவ் ரொமான்ஸ் தான்!! காயத்தோடு வீட்டுக்கு போன வாணி போஜன்
சின்னத்திரையில் தெய்வமகள் என்ற சீரியலில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை வாணி போஜன். இதன்மூலம் வெள்ளித்திரை வாய்ப்புகளை பயன்படுத்தி சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருப்பதாகவும் எந்நேரமும் ஜெய் வாணி போஜன் வீட்டில் தான் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதெல்லாம் பொய் என்று வாணி போஜன் கூறியிருந்தார். அவரை தொடர்ந்து நடிகர் பரத்துடன் மிரள் என்ற படத்தில் நடித்தார்.
அப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. அதனை தொடர்ந்து மீண்டும் பரத்துடன் லவ் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகினார். படத்தின் போஸ்டரில் இருவரும் போர்வை போர்த்திக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியது.
பின் படத்தின் டீசரில் பரத்துடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அடுத்த கிசுகிசுக்கு ரெடியாகிட்டாங்க வாணி என்று கலாய்த்து வருகிறார்கள்.